அத்துமீறி நடந்த இண்டிகோ விமான ஊழியர்.. பூஜா ஹெக்டே ட்விட்டரில் வெளியிட்ட பதிவு !
மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே, 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.
இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார். புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார். பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை. விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இருந்தாலும், அப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலில் இவரது நடனம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனது ஹட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இவரது உடை, ஸ்டைல் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இவரின் ட்வீட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூஜா ஹெக்டே தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்த போது, அதன் விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது ஆக்ரோஷமான நடத்தை மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற பதிவுகளை தான் வெளியிடுவதில்லை ஆனால் இது மிகவும் பயங்கரமானது’ என பதிவிட்டுள்ளார்.