இந்த 25 sec வீடியோ.. மண்டக்குள்ள ஓடிட்டே இருக்கு.. பூஜா ஹெக்டே வெளியிட்ட HD வீடியோ !

Pooja hegde dance in arabic kuthu hd video released on fan request

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார்.

புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார். பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை.

Pooja hegde dance in arabic kuthu hd video released on fan request

மேலும், பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில், அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால், படம் வெளியாகி 1 மாதம் நிறைவடையாத நிலையில், OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

Pooja hegde dance in arabic kuthu hd video released on fan request

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெறாத நிலையில், இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்த அரபிக் குத்து பாடல் இணையத்தில் சாதனை படைத்துள்ளது.

இதில் இடம்பெற்ற அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, திரை தீ பிடிக்கும் போன்ற பாடல்கள் ரசிகர்கள் பிடித்த வண்ணம் அமைந்துள்ளது. இந்நிலயில், அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் ஆடும் அந்த சில நிமிட வீடியோ ரசிகர்கள் பேவரைட்டாக மாறி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Pooja hegde dance in arabic kuthu hd video released on fan request

ரசிகர்கள் இந்த வீடியோ விருப்பப்பட்டு கேட்டு வந்த நிலையில், பூஜா ஹெக்டே இப்பாடலில் அந்த சில நிமிட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this post