விபத்தில் சிக்கிய நடிகை பூஜா ஹெக்டே.. வெளியான அதிர்ச்சி புகைப்படம்..

மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே, 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார். புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார்.
பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை. விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும், அப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலில் இவரது நடனம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனது ஹட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
தற்போது, இவர் கைவசம், சர்கஸ், கபி ஈத் கபி தீபாவளி, ஜன கன மன ஆகிய பெரிய பட்ஜெட் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பிசியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தற்போது ஹாயாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹிந்தியில் இவர் நடித்து வரும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு போது, தவறி விழுந்ததில், பூஜாவின் இடது காலில் உள்ள தசை நார் கிழிந்து வலியில் துடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
தற்போது மருத்துவர்களின் அறிவுரை படி, சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய காலில் கட்டுபோட்டுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், புகைப்படம் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். ரசிகர்களும் விரைவில் பூஜா ஹெக்டே நலமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.