பிரம்மாண்டத்தின் உச்சம் Goosebumps தந்து திணறடித்த பொன்னியின் செல்வன் 1.. வைரலாகும் ட்விட்டர் விமர்சனம் !
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, இவர்கள் குறித்த வீடியோ, glimpse என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி உள்ளது. அப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். பொன்னியின் செல்வன் முதல் பாதி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், மணிரத்னத்தின் திரைக்கதை சூப்பர் என்றும் பெருமையாக இருப்பதாகவும், பிரம்மாண்ட காட்சியமைப்பு, ஏ.ஆர்.ரகுமானின் இசை அருமை என பதிவிட்டுள்ளனர் படம் பார்த்த ரசிகர்கள். கார்த்தியின் நடிப்பு செமயாக இருப்பதாகவும், திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரமின் நடிப்பையும் பாராட்டி உள்ளனர்.
First Half : #PonniyanSelvan
— ᴘᴇᴀᴄᴇ ᴍᴀᴋᴇʀ ᴷᵃᵗʰⁱʳ ˢᵗᵃⁿ (@love_u_cinema) September 30, 2022
Interesting Screenplay , It Was One Man Show @Karthi_Offl Untill @chiyaan
In Interval 🥵🔥 #AishwaryaRai All The Dialogues Abt Her Beauty Are Trueee 😍 @trishtrashers And Karthi Scene Was Soo Cute 😍♥️ , #CholaChola Song Visuals ♥️ Can't Wait For JR pic.twitter.com/5cLnDT4QSi