பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கிய படக்குழு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான சூப்பர் அப்டேட்..

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிரத்னத்துக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

5 பாகம் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் முதல் பாகம் & 2ம் பாகத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டது முதல் பாகமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1. 2ம் பாகத்தில் பெருவாரியான கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்த மீதி 3 பாகங்களின் கதையை மணிரத்னம் படமாக மாற்ற வேண்டும். இது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

இந்நிலையில், பொன்னியின் செல்வன் பார்ட் 2வில் இடம்பெற்றுள்ள பூங்குழலியின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லீக்காகியுள்ளது.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் 5 நாட்களில் 300 கோடியை நெருங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் பாகத்திற்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.

ponniyin selvan 2 shooting begin and release date update has been released by the team

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கான பணிகளை இயக்குனர் மணிரத்னம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தின் பின்னணி பணிகளை துரிதமாக முடித்து படத்தை 7 மாதத்தில், அதாவது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம்.

Share this post