'வருகிறான் சோழன்'.. பிரம்மாண்ட படைப்பு ‘பொன்னியின் செல்வன்’ பட அப்டேட் இதோ..
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்தின் சிறப்பு சப்தம், பின்னனி ஓசைகள் (Foley), ரீ ரெக்கார்டிங் ஆகியவை நுங்கம்பாக்கம் ரிவர் ரெக்கார்ட்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. டீசரை ஜூலை முதல் வாரத்தில் பிரமாண்டமாக வெளியிடுவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியீட்டிற்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு உலக சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தஞ்சாவூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் டீசர் வெளியிடப்படும் என சமீபத்திய தகவல்கள் வெளியானது. பின்னர் அது கைவிடப்பட்டது.
‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதே நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டத்தின் இரண்டாம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் நடித்த சில புகைப்படங்கள் வெளியாகி செம வைரல் ஆனது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி அப்படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘வருகிறான் சோழன்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் அடுத்த வாரம் வெளியாக உள்ளதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.
Look out! Brace yourself.
— Madras Talkies (@MadrasTalkies_) July 2, 2022
Get ready for an adventure filled week!
The Cholas are coming! #PS1 🗡 @LycaProductions #ManiRatnam pic.twitter.com/uLYPJ4Z0LC