வீடியோவில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தியின் காட்சி ! முதல்முறையாக வெளியான புகைப்படம்..

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

படத்தின் சிறப்பு சப்தம், பின்னனி ஓசைகள் (Foley), ரீ ரெக்கார்டிங் ஆகியவை நுங்கம்பாக்கம் ரிவர் ரெக்கார்ட்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீசரை ஜூலை முதல் வாரத்தில் பிரமாண்டமாக வெளியிடுவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியீட்டிற்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு உலக சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தஞ்சாவூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் டீசர் வெளியிடப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

படத்தின் டீசர் ஜூலை 7ம் தேதி புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது என கூறப்படுகிறது. டீசர் வெளியீட்டு விழாவிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதே நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டத்தின் முதல் பாகம் இந்த செப்டம்பரில் வெளியாகிறது, இரண்டாம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்டில் என்று ஒரு புகைப்படம் லீக்காகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் ரோலில் விக்ரம் நடித்துள்ளார். இவர் குதிரையில் வர, ஏராளமானவர்கள் தாரை தப்பட்டையுடன் அவரை சுற்றி வரும் ஸ்டில் லீக்காகி உள்ளது.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

ஏற்கனவே படத்தில் ஐஸ்வர்யா ராய், ராணி கெட்அப்பில் நடித்துக் கொண்டிருந்த ஷுட்டிங் ஸ்பாட் போட்டோ ரிலீசானதால், இனி செட்டில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் மணிரத்னம். மீறி போட்டோவை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

படத்தின் ரிலீஸ், ப்ரொமோஷன் வேலைகள் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற ஸ்டில்கள் லீக்காவது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மேலும் இது போன்ற ஸ்டில்கள் லீக்காமால் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி ரசிகர்கள் படக்குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே சமயம் இது பொன்னியின் செல்வன் ஸ்டில் கிடையாது. ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட பழைய கரிகாலன் படத்தின் ஸ்டில் என நெட்டிசன்கள் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணி தொடங்கியுள்ளது குறித்து ட்ரம்ஸ் சிவமணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் கார்த்தி நடித்த காட்சியின் புகைப்படம் உள்ளது. இந்த போட்டோவை தொடர்ந்து வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரம் எப்படி இருக்குமென ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

Ponniyin selvan 1 karthi scene has been leaked on social media

Share this post