நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங் மீது போலீஸில் புகார்! அடுத்து விஷ்ணு விஷாலா?

Police case against ranveer singh for nude photoshoot

2010ம் ஆண்டு Band Baaja Baaraat என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரன்வீர் சிங். இதனைத் தொடர்ந்து, Ladies vs Ricky Bahl, Lootera, Goliyon Ki Raasleela Ram-Leela என பல பிரபல பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். வெகு சில திரைப்படங்களிலேயே முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார்.

Police case against ranveer singh for nude photoshoot

2018ம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 83 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 1983ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் அப்போதைய இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார்.

Police case against ranveer singh for nude photoshoot

இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் கபூர் நாயகனாக இயக்குனர் ஷங்கர் உடன் பணியாற்ற உள்ளார். விரைவில் இதற்கான ஷூட்டிங்கும் தொடங்க உள்ளது. நடிகர் ரன்வீர் சிங், நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருபவர்.

Police case against ranveer singh for nude photoshoot

வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என தனித்துவமாக விளங்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Police case against ranveer singh for nude photoshoot

நாளிதழ் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாக சொல்லப்பட்டது.

Police case against ranveer singh for nude photoshoot

இந்த போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் சில ஆதரவுகளும் பல எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இவர் மீது மும்பை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடிகர் ரன்வீர் சிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. நடிகை மிமிக் சக்கரவர்த்தி, ரன்வீரின் படங்கள் குறித்து பேசுகையில், இந்த போட்டோசூட்டை ஒரு பெண் நடிகை செய்திருந்தால் விளைவு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருந்தார்.

Police case against ranveer singh for nude photoshoot

ஒரு பெண் இப்டி செய்திருந்தால் இப்படி பாராட்டுக்கள் இருந்திருக்குமா என யோசிக்கிறேன். மாறாக இந்த சமூகம் அவளை அவமானப்படுத்து இருக்கும். நாம் சமத்துவத்தை பற்றி பேசுகிறோம் இது இப்போது எங்கே? இந்த விஷயத்தில் நமது பார்வையை விரிவுபடுத்தலாம் என கூறியிருந்தார். பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ஸ்வாரா பாஸ்கர், ராக்கி சாவான் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரும் ரன்வீர் சிங்கின் புகைப்படங்களை ஆதரித்தனர்.

இவரை தொடர்ந்து, தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் நிர்வாணமாக போட்டோ வெளியிட்டதால், இவர் மீதும் அடுத்ததாக புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஷ்ணு விஷால், தன் மீதும் புகார் வந்துவிடுமோ என்கிற கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Police case against ranveer singh for nude photoshoot

Share this post