"தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை" ஃபேவரைட் பாடகி சங்கீதா சஜித் திடீர் மரணம்..!

Play Backsinger Sangeetha Sajith Died Today Inkerala

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200 - க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

கர்நாடக இசைக் கலைஞராகவும் அறியப்பட்ட சங்கீதா சஜித், முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

Play Backsinger Sangeetha Sajith Died Today Inkerala

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தைகாடு எனும் இடத்தில் தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் இன்று(22.05.2022) காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 46.அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளன.

இசைக்கலைஞர்களும் ரசிகர்களும் சங்கீதாவின் திடீர் மறைவால் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கீதா சஜித் பாடிய பாடல்களை ஷேர் செய்து ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post