அமீர் காலுக்கு என்ன ஆச்சு? அப்போ BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ? பாவனி திடீர் ட்வீட்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலம் அடைந்தவர்கள் அமீர் - பாவனி. நிகழ்ச்சியில் இவர்கள் செய்த விஷயங்கள் இவர்களை காதலர்கள் என கிசுகிசுக்கும் அளவிற்கு மாறிவிட்டது. ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ள பாவனி, சின்ன தம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது.
அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வந்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கம் பேக் கொடுத்து வந்தார் பாவனி. அப்படி இவர் தன்னை நிரூபிக்க பங்கேற்ற ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 5. இதில் பங்கேற்ற சக போட்டியாளரான அமீருடன் பாவனி காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது.
நிகழ்ச்சியின் போதே காதல் பேச்சுக்கள் அதிகம் வெளியான நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக வெளியே செல்வது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர். அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம். பாவனியும் அமீரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், ஒருவழியாக இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஜோடிகளாக மாறிவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேடையில் அனைவரது முன்பும் பாவானிக்கு ஐலவ்யூ என அமீர் கூறிய வீடியோ செம வைரல் ஆனது . அதனைத் தொடர்ந்து, அதே நிகழ்ச்சியில் கேள்விக்கு பதிலளிக்கும் டாஸ்க்கில், “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என கூறி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வந்தனர்.
இருவரும் காதலிப்பதாக மற்றும் திருமணம் குறித்து அவர்களாக இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பாவனி கேண்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால், அவர் மறைமுகமாக காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். நாளுக்கு நாள் இவர்களின் நடனம் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. மேலும், அமீர் - பாவனி இருவரும் வெளியே செல்வது, புகைப்படங்கள் எடுத்து பதிவிடுவது என தங்கள் காதலை மறைமுகமாக காட்டி வருகின்றனர்.
பாவனி தனது இன்ஸ்டா பக்கத்தில் அமீரின் பிறந்தநாள் அன்று, வாழ்த்து தெரிவித்து அவருடனான நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், அமீர் குறித்து பதிவிட்டு love you da எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பாவனி ஒரு வழியாக தனது காதலை ஒப்புக்கொண்டார் என கமெண்ட் செய்து வந்தனர்.
இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே செல்லும் நிலையில், இவர்களது திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியில் அந்த போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை என்னவென்றால் காதலை கூறிய விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் - பாவனி ஜோடி. இந்த வாரம் நடந்த பிபி ஜோடிகள் ஷோவில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.
தற்போது, கடந்த வார நிகழ்ச்சியின் போது அமீர் காலில் பிரச்சனை இருந்ததாகவும், அதையும் தாண்டி அவர் நடனமாடினார் என தற்போது பாவனி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை பதற வைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே அமீர் கால் பிரச்சனையாகவே இருந்தது. இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வுக்காக ரொம்பவே சிரமப்பட்டு தொடர்ந்து கஷ்டமான ஸ்டெப்புகளை கொரியோகிராஃப் செய்து நடனமாடி வந்தார்.
‘ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் அமீர் ரெஸ்ட் எடுத்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் எழுந்து நிற்கும் உன் மனசுக்குத்தான் உன்னை எல்லாரும் லவ் பண்றாங்க’ என அவர் பதிவிட்ட நிலையில், மறைமுகமாக தனது காதலையும் பாவனி வெளிப்படுத்தி உள்ளாரா? என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர். திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும், மருத்துவ ரிப்போர்ட்டையும் ஷேர் செய்துள்ளார் பாவனி.
பாவனி இப்படியொரு ட்வீட்டை போட, அமீரின் முயற்சி ரொம்பவே பெரிய விஷயம். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த பர்ஃபார்மன்ஸை தரமா செய்யுங்க என ரசிகர்கள் டேக் கேர் அமீர் என கமெண்ட் செய்து வருகின்றனர். பாவனியின் இந்த திடீர் ட்வீட் காரணமாக இருவரும் இனி தொடர்ந்து ஆட மாட்டார்களா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.