'அமீரால் தான் உன் பேர் கெடுது' என சொன்ன அக்கா இன்று அமீர் பற்றி என்ன சொல்லிருக்காருனு பாருங்க.. வைரலாகும் வீடியோ !

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலம் அடைந்தவர்கள் அமீர் - பாவனி. நிகழ்ச்சியில் இவர்கள் செய்த விஷயங்கள் இவர்களை காதலர்கள் என கிசுகிசுக்கும் அளவிற்கு மாறிவிட்டது.

ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ள பாவனி, சின்ன தம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வந்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கம் பேக் கொடுத்து வந்தார் பாவனி. அப்படி இவர் தன்னை நிரூபிக்க பங்கேற்ற ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 5.

இதில் பங்கேற்ற சக போட்டியாளரான அமீருடன் பாவனி காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது. நிகழ்ச்சியின் போதே காதல் பேச்சுக்கள் அதிகம் வெளியான நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக வெளியே செல்வது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.

பாவனியும் அமீரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், ஒருவழியாக இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஜோடிகளாக மாறிவிட்டனர்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக,வேல்முருகன் - இசைவாணி, ஐக்கி - தேவ்,அபிஷேக் - ஸ்ருதி ,ஹாரத்தி - கணேஷ் ,சுஜா - சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டய கிளப்பி வருகின்றனர்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

இந்நிகழ்ச்சியில் மேடையில் அனைவரது முன்பும் பாவானிக்கு ஐலவ்யூ என அமீர் கூறிய வீடியோ செம வைரல் ஆனது . அதனைத் தொடர்ந்து, அதே நிகழ்ச்சியில் கேள்விக்கு பதிலளிக்கும் டாஸ்க்கில், “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என கூறியது வைரல் ஆனது.

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வந்தனர்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

இருவரும் காதலிப்பதாக மற்றும் திருமணம் குறித்து அவர்களாக இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது பாவனி கேண்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

இதனால், அவர் மறைமுகமாக காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். நாளுக்கு நாள் இவர்களின் நடனம் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. மேலும், அமீர் - பாவனி இருவரும் வெளியே செல்வது, புகைப்படங்கள் எடுத்து பதிவிடுவது என தங்கள் காதலை மறைமுகமாக காட்டி வருகின்றனர்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

இந்நிலையில், இந்த வார பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பாவனிக்கு சர்ப்ரைசாக அவருடைய அக்கா என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

அவர் அமீர் குறித்து கூறியிருந்தது, ‘அமீர் தான் பாவனியை மாற்றி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேச வைத்துள்ளார். அதனால் தான் அமீர் – பாவனி உறவு இன்னும் பலமாக உள்ளது. எங்களுக்கும் அது மகிழ்ச்சியை தருகிறது. அதற்காக அமீருக்கு நன்றி சொல்கிறேன்’ என்று சொல்லி வாட்ச் ஒன்றையும் அமீருக்கு கிப்ட் செய்திருக்கிறார். இதை பார்த்து சாக்கான பாவனி அந்த வாட்சை வாங்கி அமீருக்கு தனது கையால் போட்டு விடுகிறார். இந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Pavani reddy sister changes her opinion about amir video getting viral on social media

மேலும், இதே அக்கா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்ற போது, அமீருடன் பார்த்து பழகு, உன் பெயர் அவரால் கெடுகிறது போல கூறியிருந்தார்.

Share this post