'எனக்கு அமீர் பிடிக்கும், ஆனா' - BB ஜோடிகள் மேடையில் அமீர் காதல் குறித்து பாவனி சொன்ன பதில் ! வீடியோ வைரல் !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலம் அடைந்தவர்கள் அமீர் - பாவனி. நிகழ்ச்சியில் இவர்கள் செய்த விஷயங்கள் இவர்களை காதலர்கள் என கிசுகிசுக்கும் அளவிற்கு மாறிவிட்டது.
ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ள பாவனி, சின்ன தம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது.
அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வந்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கம் பேக் கொடுத்து வரும் பாவனி, அமீருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது.
அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.
பாவனியும் அமீரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், ஒருவழியாக இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஜோடிகளாக மாறிவிட்டனர்.
பாவனி அமீர் ஹாஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக,வேல்முருகன் - இசைவாணி, ஐக்கி - தேவ்,அபிஷேக் - ஸ்ருதி ,ஹாரத்தி - கணேஷ் ,சுஜா - சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டய கிளப்பி வருகின்றனர்.
வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில், அமீர் மற்றும் பாவனி முதல்வன் படத்தில் இடம்பெற்ற உப்புக்கருவாடு பாடலுக்கு ஆடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் அனைவரது முன்பும் பாவானிக்கு ஐலவ்யூ என்று கூறியுள்ளார் அமீர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சி பதிவிட்டுள்ள ப்ரோமோ வீடியோவில் கேள்விக்கு பதிலளிக்கும் படி டாஸ்க்கில், “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என பேசியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.