அடுத்தடுத்து அறிவிப்பால் கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்.. வெளியானது 'பத்துதல' ரிலீஸ் தேதி !
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . தற்போது, இவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு நடித்து வந்தார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த சிம்பு, பத்து தல படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க மீண்டும் ரிஸ்க் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.
2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்று வசூலை வாரிக்குவித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்பு தற்போது தன் தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக அவரோடு அமெரிக்கா சென்றுள்ளார். அதனால் பத்து தல படத்தின் படப்பிடிப்பில் சிம்புவால் கலந்து கொள்ளமுடியவில்லை.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி 45 நாள் தொடர்ந்து நடத்தி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாகவுள்ளதாகவும், சிம்பு இதில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்துதல திரைப்படம் டிசம்பர் மாதம்14ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.. மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.