'எனக்கு 26 வயசு ஆகுது.. நான் குழந்தை இல்ல'.. தன்னை குழந்தை என அழைத்ததற்கு விளக்கமளித்த பசங்க பட சிறுவன்.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

பாண்டிராஜ் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டியன், விமல், வேகா, ஜெயப்ரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் பசங்க. 2009ம் ஆண்டு வெளியான இப்படத்தை சசிகுமார் தயாரித்திருந்தார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தமிழக மாநில விருதையும் இப்படத்தின் சில நட்சத்திரங்கள் பெற்றனர். பசங்க படத்தின் குழந்தை நட்சத்திரம், விருது வாங்கும் போது ஏற்பட்ட சம்பவம் ஒன்றை கூறி இருக்கறார். தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்தது.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

இந்த விருது கடந்த 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரசும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில், சமீபத்தில் இந்த விருதுகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

அதில் 2009 முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருது பட்டியலில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம் கிசோர் ஆகியோருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழக்ங்கப்பட்டு இருந்தது.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

தற்போது ஸ்ரீராம் ‘5678’ வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் ஏ.எல்.அழகப்பன் ஹிதேஷ் தாக்கூர் தயாரித்து இருக்கின்றனர். விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா என்ற இளமையான மற்றும் திறமைமை மிக்க இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி எடுத்துக்காட்டுகிறது.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து ஆனால் அடக்கமான பின்னணியில் இருந்து வரும் இந்த தனிநபர்கள் நடனத்தின் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்கள், ஆனால் எந்த தொழில் ரீதியாக எந்த ஒரு பயிற்சி பெறுவதற்கான பின்னணியும் இவர்களுக்கு இல்லை. பின்னர் அவர்களின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே இந்த வெப் தொடரின் கதை.

pasanga movie sreeram says that he is not a kid anymore as called kid on stage

சமீபத்தில் இந்த வெப் தொடரின் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பசங்க ஸ்ரீராம் ‘2009ம் ஆண்டு நான் நடித்த படத்துக்கு தமிழ்நாடு மாநில விருது கிடைத்தது. மேடையில் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று அறிவித்து என்னை அழைத்தார்கள். அந்த விருதை வாங்க மேடை ஏறிய போது அரங்கத்தில் இருந்த மொத்த பேரும் எங்களை பார்த்து சிரித்தார்கள். இங்கும் என்னை குழந்தை நட்சத்திரம் என்று கூப்பிட்டீர்கள் எனக்கு 26 வயசு ஆகுது. நான் ஒன்னும் குழந்தை இல்லை’ என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார்.

Share this post