'நைட் பார்ட்டி'ல அத பாத்துட்டேன்.. அத செல்ல கூடாதுன்னு.. எச்சில் துப்பி அடிச்சி திருட்டு பட்டம் கட்டிட்டாங்க' பார்வதி நாயர் மீது இளைஞர் புகார்
பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு மாடலிங்கில் ஒரு கலக்கு கலக்கி வந்தவர் நடிகை பார்வதி நாயர். இதன் மூலம், பாடல் ஆல்பங்கள், குறும்படம் மற்றும் பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்தவர் இவர். இப்படி, திரைப்பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து வரத் தொடங்கின. மலையாளத்தில் தொடர்ந்து 5 திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் பெற்று, கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றார்.
தமிழில், அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று விருதுகளும் பெற்றார். பின்னர், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது சில தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்த நபர் ஒருவர், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை திருடி சென்று விட்டார் என்று பார்வதி நாயர் போலீசில் புகார் அளித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில், பார்வதி வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பார்வதி நாயர் தன் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் இரவு நேரங்களில் அவர் சில ஆண் நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திவிட்டு இருப்பதை தான் பார்த்து விட்டதாகவும் இதனால் அவருக்கு கோபம் ஏற்பட்டுவிட்டது.
எங்கே நான் அந்த விஷயத்தை வெளியில் சொல்லி விடுவானோ என்று அன்றைய நாள் முதல் தன்னை அடிக்கடி திட்டியும், அசிங்கமாக பேசி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் தன்னை துன்புறுத்தி தன் மீது எச்சில் துப்பியதாகவும் கூறி இருக்கிறார். அதேபோல அடியாட்களை வைத்து தன்னை பார்வதி நாயர் தாக்கியதாகவும் சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும், கடந்த 27ம் தேதி காவல் நிலையத்தில் என் மீது புகார் அளிப்பாயா என்று மிரட்டியதாகவும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக மீண்டும் தன் மீது அபாண்டமாக பார்வதி நாயர் புகார் அளித்திருக்கிறார் என்றும் சுபாஷ் சந்திரபோஸ் கூறியிருக்கிறார்