அடுத்த முதல்வர் இவர் தான்.. சூசகமாக ட்வீட் செய்த பார்த்திபன் !

Parthiban tweets about next cm getting viral on social media

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இப்படம் ரெகார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Parthiban tweets about next cm getting viral on social media

இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் மேடையில் உரையாடிக்கொண்டிருந்த இயக்குனர் பார்த்திபன், மைக் சரியாக வேலை செய்யவில்லை என மேடையில் இருந்து மைக்கை கீழே போட்டது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது.

Parthiban tweets about next cm getting viral on social media

அதன் பிறகு, தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி பார்த்திபன் வீடியோ பதிவிட்டதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர்.

Parthiban tweets about next cm getting viral on social media

இரவின் நிழல் படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஆடியோ லாஞ்ச் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி ஆடியோ வெளியீடும், ஜூன் 24ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டருடன் இந்த முதல் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை கால்களாய் நினைத்து வணங்குகிறேன் என்னும் வாசகம் இடம்பெற்றிருந்தது.

Parthiban tweets about next cm getting viral on social media

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலைகள் இரவின் நிழல் படத்திற்கு நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து இருந்த பார்த்திபன், “சாதல் சாதாரணம். சாதித்தல் அசாதாரணம். அதற்கான முயற்சியும் உழைப்பும் சதா ரணம். கண்டுணர்ந்து பாராட்டுதல் பெருங்குணம்.உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம். இந்நிமிட கடைசி முதல், அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன். நன்றி சின்னவரே! என கூறியுள்ளார். மறைமுகமாக முதல்வர் என அவர் பதிவிட்டிருந்தது செம வைரல் ஆகி வருகிறது.

Parthiban tweets about next cm getting viral on social media

Share this post