பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், 'மோடிஜீக்கு ஜே'.. பார்த்திபன் சர்ச்சை ட்வீட்!
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற லால் சிங் சத்தா படத்தின் ப்ரீமியர் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகரான அமீர்கானோடு, லால் சிங் சத்தா படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தை பார்த்த பார்த்திபன் பதிவிட்டுள்ள ட்வீட்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன.
“Laal singh Chaddha ‘பார்த்து கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன், “ U r just spreading LOVE through this film to a society where there’s is hatred and negativity” Amazing movie. அன்பை,அர்ப்பணிப்பை, காதலை,கடமையை கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம்.
தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப…. தேசிய விருதுக்கா?” என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், “மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது” என பார்த்திபன் ட்வீட் போட்டு தனது விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
இதற்கு, பார்த்திபனும் பாஜகவில் ஐக்கியமாகி விட்டார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். உங்க விளக்கம் புரியவில்லை, குழப்பமாக இருக்கிறது என்றும், அவன் உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே தலக் புலக்னு ஆடிப் போச்சு என ட்ரோல் மீம்களையும் நெட்டிசன்கள் பார்த்திபனின் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட்டாக போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.
தேசிய விருதுக்கா?”
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 8, 2022
என்ன ஒரு கலை மதிப்பு?
பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது. pic.twitter.com/eAS9u1yjmR