'பொன்னியின் செல்வன்' ப்ரொமோஷனில் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தை கலாய்த்த பார்த்திபன்.. வைரலாகும் வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு பிறகு தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, இன்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் அவர்கள் ஒட்டி பிறந்த பிரபு, கதிர் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படம் மோதுகிறது என்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதோடு பல ஆண்டு கனவான பொன்னியின் செல்வன் படத்தோடு நானே ஒருவன் படம் மோதலா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், நான் எந்த படத்துடன் போட்டியிடவில்லை. தமிழகத்துக்கும், தமிழ் திரையுலகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெளியாகும் இரண்டு படங்களை ஏன் எல்லோரும் போட்டியாக பார்க்கிறீர்கள்?
நவராத்திரி விடுமுறை குறிவைத்து தான் இந்த படத்தை வெளியிட முடிவு செய்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். அது மட்டும் இல்லாமல் தனுஷின் அசுரன் படம் நவராத்திரி விடுமுறையில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதால் அதே செண்டிமெண்டில் தான் நானே வருவேன் படத்தையும் வெளியிட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பார்த்திபன் கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, நாளை பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில், பட குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பார்த்திபன், திரிஷா பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள்.
அப்போது பார்த்திபன் அவர்கள், நானே வருவேன்! நானே வருவேன் என்று அடம்பிடித்து வந்தேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியது தனுஷ் படத்தை கலாய்த்து தான் கூறியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் வீடியோவை பயங்கர வைரலாக்கி வருகிறார்கள்.
Senjifying D na in his own style 🤪😝@rparthiepan 🔥#NaaneVaruveanpic.twitter.com/EtZpGSokfr
— Troll Negativity (@TrollNegativity) September 29, 2022
#Parthiban Trolls #NaaneVaruvean #thug #Dhanush #PonniyinSelvan #Ps1 #ChiyaanVikram pic.twitter.com/aXphs53lHf
— Filmic Reels (@filmic_reels) September 29, 2022