மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. A.R. ரஹ்மான் ஷாக்.. வைரலாகும் வீடியோ ! செய்யக்கூடாததை செய்துவிட்டேன் என புலம்பும் பார்த்திபன் !

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

பார்த்திபன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’இரவின் நிழல்’. இப்படத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மேடை அலங்காரங்கள், லைட் செட்டிங் எல்லாம் அம்சமாக ரெடி செய்திருந்தனர்.

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

இதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் பாடியுள்ள ‘மாயவா சாயவா’ எனும் பாடலை இயக்குநர் பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர்.

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு பழனியப்பன் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகர, ரோபோ சங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

நிகழ்ச்சியில் மேடையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்க்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார்.

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

இந்நிகழ்ச்சியில், பார்த்திபன் அவர்கள் செய்த ஒரு செயல் வந்திருந்த விருந்தினர்களையும், ரசிகர்களையும், உரையாடி கொண்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விழாவின் போது ஏஆர் ரஹ்மானுடன் பார்த்திபன் உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது மைக் வேலை செய்யவில்லை.

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், மைக்கை தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன், நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துக் கொண்டார்.

Parthiban throws mike from stage infront of arrahman video getting viral

மேலும், ரஹ்மான் அவர்களுக்கு அந்த ஷீல்டு கொடுக்கையில் பதட்டம் அடைந்துவிட்டதாகவும், தூக்கமின்றி வேலை செய்த டென்ஷன் எல்லாம் சேர்ந்து அப்படி செய்து விட்டேன். இனி சரி செய்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

Share this post