'இளையராஜா எம்.பி ஆனது பெருமையான விஷயமே இல்ல' மேடையில் இயக்குனர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு

Parthiban says ilayaraja mp post is not an big one

தமிழ் திரையுலகில் பெருமைக்குரிய விஷயமாகவும், ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் விஷயம் இளையராஜாவுக்கு மத்திய அரசு பதவியான எம்.பி பதவி கிடைத்தது தான். இசைஞானி இளையராஜா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது.

Parthiban says ilayaraja mp post is not an big one

இதையடுத்து இளையராஜாவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். 50 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இனிமையான இசையால், பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டிப்போட்ட இளையாராஜா தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் பிறந்தவர்.

Parthiban says ilayaraja mp post is not an big one

இன்று இசைஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு, இந்த அடைமொழியை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆவர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிறந்த இசையமைப்பாளருக்காக 5 முறை தேசிய விருது, கலைமாமணி, பத்ம பூஷன் விருது, இசைக்காக வழக்கப்படம் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், கோல்டன் ரெமி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

Parthiban says ilayaraja mp post is not an big one

இப்படி அடுக்கடுக்காக பல சாதனைகளுக்கு செய்த இளையராஜாவுக்கு, மேலும் ஒரு மணி மகுடமாய் மத்திய அரசு தற்போது இவரை மாநிலங்களவை எம்பியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவுக்கு இதற்காக ஒருபுறம் வாழ்த்து மழை பொழிந்தாலும், மறுபுறம் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Parthiban says ilayaraja mp post is not an big one

காரணம் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தின் முன்னுரையை எழுதி இருந்தார். இவ்வாறு மோடியை புகழ்ந்ததால் தான் அவருக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டு உள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

Parthiban says ilayaraja mp post is not an big one

இதில் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன், இளையராஜா எம்.பி. ஆனது குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் பேசியதாவது : இளையராஜா எம்.பி ஆகி உள்ளதாக வந்த செய்தி, என்னைப் பொருத்தவரை பெருமையான விஷயமே இல்லை.

Parthiban says ilayaraja mp post is not an big one

ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு பெரிய MP, Music of paradise இளையராஜா இப்போது எம்.பி ஆகி இருப்பது ஒரு சாதாரண விஷயம் தான் என புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குனர் பார்த்திபன் இயக்கி வரும் ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post