தமன்னா நடனமாடினால் போதும்.. ரஜினி படத்தை தாக்கி பேசிய பார்த்திபன்..!
சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வெள்ளி கிழமை ரிலீசான TEENZ படம் இந்தியன் படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனம் கிடைக்காத நிலையில், TEENZ படத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. தன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக ஒரு பதிவை பார்த்திபன் ட்விட்டரில் போட்டிருக்கிறார். இந்த படத்திற்கு, வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், சினிமாவை விட்டு விலகி கண்காணாத இடத்திற்கு சென்று விட முடிவு செய்திருந்தாராம் அவர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.
இதுவரை டீன்ஸ் திரைப்படம் 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக பார்த்திபன் தொடர்ந்து பல பிரமோஷன் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில், பல சுவாரசியமான விஷயங்களையும் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டு உள்ளார். இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் ஒரு படம் நல்லா ஓடுவதற்கு மிகப்பெரிய வெற்றி காரணமாக தமன்னா அமைந்து விடுகிறார். தமன்னா நடனம் ஆடினால் போதும் மீதம் இருக்கும் கதை என பேசியுள்ளார். பார்த்திபன் கூறியது ரஜினியின் ஜெய்லர் படத்தையும் சுந்தர் சி யின் அரண்மனை 4 புகைப்படத்தையும் என கூறி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். ஆனால், பார்த்திபன் படத்தின் பெயரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.