'இனி ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டியா..? என்ன கதை வேற எங்கயோ போகுது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடியோ வைரல்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது. இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது. இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கூட்டு குடும்பம் மூன்றாக உடைந்துவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் எழுதும்போது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியாக பெயர் வந்ததால் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக ஜீவா சண்டை போட்டு மாமியார் வீட்டிலேயே இனி இருக்கப்போவதாக கூறினார். அதன் பின் கண்ணன் - ஐஸ்வர்யாவும் சண்டை போட்டு சென்றுவிட்டனர்.
சீரியல் மிக சீரியசாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் மீனாவின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனா செய்திருக்கும் காரியம் வீடியோவாக வைரலாகி வருகிறது. கல்யாண ஷூட்டிங் நடந்தபோது மாப்பிள்ளை கழுத்தில் அவர் தாலி கட்டி இருக்கிறார். அதன் பின் அதே தாலியை எடுத்து பெண் கழுத்திலும் கட்டி இருக்கிறார். தாலி கட்டிவிட்டு ‘இனி ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி’ என காமெடியாக கூறியுள்ளார்.
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023