'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் அடைந்த வெற்றி மைல்கல்.. கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழு..

pandian stores celebration for 1000 episodes photos getting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

pandian stores celebration for 1000 episodes photos getting viral

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

pandian stores celebration for 1000 episodes photos getting viral

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

pandian stores celebration for 1000 episodes photos getting viral

தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.

pandian stores celebration for 1000 episodes photos getting viral

இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

pandian stores celebration for 1000 episodes photos getting viral

இந்த சீரியலின் மூலமாக மிகப்பெரிய பிரபலமானவர் வி.ஜே. சித்ரா. அவர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டதால், அவருக்கு பதிலாக காவ்யா முல்லையாக நடித்து வருகிறார்.

pandian stores celebration for 1000 episodes photos getting viral

இந்நிலையில் மூன்று ஆண்டுகளை கடந்த நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர். இதனையடுத்து அந்த குழுவினர் அனைவரும் அதனை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

Share this post