'அந்த ஒரு கெட்ட வார்த்தை கோபத்த தூண்டுதா' லோகேஷ் படத்தை விமர்சித்த பா.ரஞ்சித்.. !

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

வங்கியில் வேலை செய்து வந்த லோகேஷ் கனகராஜ், குறும்படம் ஒன்றை இயக்கி போட்டி ஒன்றில் வெற்றி பெற்றார். அந்த போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்புராஜ் இருந்துள்ளார். போட்டியில் லோகேஷின் குறும்படம் வெற்றி பெறவே, திரைப்படங்களை இயக்க ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் மாநகரம் என்னும் தனது முதல் படத்தை இயக்கினார் லோகேஷ். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

இதன் பின்னர், மூன்றாவது படமே, தளபதி விஜய் செய்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

தற்போது, கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சூர்யா, நரேன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் பேராதரவை பெற்று வருகிறது.

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

இந்நிலையில், மாநகரம் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு கெட்ட வார்த்தை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் சில வருடங்களுக்கு முன் படத்தை விமர்சித்து பேசிய வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

இதில் “மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம். ஏன், இதற்கும் முன் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஒரு ஊரிலும் கெட்ட வார்த்தையை கேட்டதே இல்லையா. இந்த வார்த்தை கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அது உங்கள் சைக்கலாஜிக்கல் பிரச்சனை. ஏனென்றால், உன் சொல்பேச்சை கேட்ட அடிமைப்பட்டு கிடந்த ஒருவன், சென்னையில் உன்னை அசால்டாக டீல் செய்வது, உனக்கு கோபத்தை தூண்டுகிறது “ என்று கூறியுள்ளார்.

Pa ranjith old video about lokesh kanagaraj maanagaram movie video getting viral

சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share this post