இப்டி செய்தால் குற்ற செயல்பாடுகள் குறையும்.. ஆண்கள் குறித்து ஓவியா பேசிய கருத்தால் பரபரப்பு !

Oviya about men and child growth speech getting viral

களவாணி, மன்மதன் அம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே, மலையாள மொழி திரைப்படத்தில் நடித்தார். பின்னர், கன்னட, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Oviya about men and child growth speech getting viral

தமிழில், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மத யானை கூட்டம், யாமிருக்க பயமேன், 90ml, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே செம பிரபலம் அடைந்தார்.

Oviya about men and child growth speech getting viral

இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் ஓவியா பேசிய போது அவர் கூறியதாவது - ‘கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்காமல் ஓப்பனாக அனைத்தையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும்.

Oviya about men and child growth speech getting viral

ஆண் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள்’ என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this post