கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை.. வைரலாகும் பதிவு.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

கடந்த 1 வாரமாக தமிழகத்தையே உலுக்கி வரும் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் சம்பவம், கடந்த சில நாட்களுக்கு முன் உச்சம் பெற்று கலவரம் வரை சென்றது தான் சமூக வலைத்தளங்கள் தொடங்கி மக்கள் வரை பேசுபொருளாக உள்ளது.

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் 3வது மாடியில் இருந்து ஸ்ரீமதி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது.

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

CBCID விசாரணை, பள்ளிக்கூடத்தில் பயின்ற மற்ற மாணவ - மாணவிகளின் நிலைமை, ஸ்ரீமதி இறப்பின் உண்மை தன்மை, இன்னும் நிலவி வரும் பதற்றம் என செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதே பேச்சாக உள்ளது. சர்ச்சை கலவரமாக மாறிய பின்னர், அரசியல் பிரமுகர்கள் இதை பற்றி பேச தொடங்கினர். ஆனால், கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரு நட்சத்திரம் கூட இந்த மாணவிக்காக குரல் கொடுக்கவில்லை என்பது ஆதங்கத்தை கிளப்பி வருகிறது.

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

சமூக நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில நடிகர் நடிகைகள் கூட இந்த விஷயம் பற்றி வாய்திறக்கவில்லை. இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து மரணமடைந்த மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நட்சத்திரம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

Only tamil actress to speak about srimathi case post getting viral on social media

Share this post