Beast Teaser update : பீஸ்ட் டீசரில் இது கட்.. ட்விஸ்ட் வைத்த நெல்சன் !

No dialogues in beast teaser and release date must be announced

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் வெகு சில படங்கள் மூலமே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளவர் நெல்சன் திலீப்குமார். இதனைத் தொடர்ந்து, தற்போது விஜய் வைத்து இயக்கிய திரைப்படம் தற்போது பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். அரபிக் குத்து மற்றும் ஜாலியா ஜிம்கானா பாடல்கள் வெளியாகி செம வைரல் ஆனது.

No dialogues in beast teaser and release date must be announced

இன்னும் 2 வாரத்தில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்னும் டீசர், ட்ரைலர் என எதுவும் வெளியாகாமல் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதனால், சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் ட்ரைலர் கேட்டு ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், நேற்று இப்படத்தின் இயக்குனர் நாளை என பதிவிட்டிருந்தார். இதனால், இன்று ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

No dialogues in beast teaser and release date must be announced

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அனால், பீஸ்ட் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இன்று வெளியிடப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாம்.

பீஸ்ட் டீசரில் நடிகர் விஜய் செம்ம மாஸாக கெத்தாக இருப்பார் என்றும், அதில் வசனம் பேசும்படியான காட்சிகள் எதுவும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த டீசர் முழுவதும் பின்னணி இசையுடன் தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ரா ஏஜண்டாக நடித்துள்ளார் என்றும், தங்கக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் இந்தியில் மட்டும் ரா என்ற பெயரிலும், மற்ற 4 மொழிகளிலும் பீஸ்ட் என்ற பெயரிலும் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No dialogues in beast teaser and release date must be announced

Share this post