தளபதி 66 படத்தில் விஜய் எடுக்க போகும் மிகப்பெரிய ரிஸ்க்.. இது ஒர்க்கவுட் ஆகுமா ?

No action sequence in thalapathy66 rumours spreading on social media

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால், டாக்டர் படத்தை மிக வெற்றிகரமாக கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இருப்பினும் இப்படமும் விஜய்க்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

No action sequence in thalapathy66 rumours spreading on social media

இதனால், அடுத்ததாக விஜயின் தளபதி66 திரைப்படத்தின் மீது மக்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கப்பட்ட தளபதி66, வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

No action sequence in thalapathy66 rumours spreading on social media

இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

No action sequence in thalapathy66 rumours spreading on social media

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமாரும், ஷ்யாமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

No action sequence in thalapathy66 rumours spreading on social media

அந்த வகையில் சமீபத்திய தகவல்படி, தளபதி66 படத்தில் நடிகர் விஜய்க்கு ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

No action sequence in thalapathy66 rumours spreading on social media

விஜய் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும், அப்படி இருக்கையில், விஜய்க்கு ஆக்‌ஷன் காட்சியே இல்லாமல் உருவாகும் தளபதி66 எப்படி இருக்கு என்கிற சந்தேகமும் எழுகிறது. விஜய் எடுக்கும் இந்த ரிஸ்க் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Share this post