நிவின் பாலி'யா இது? இணையத்தில் தீயாய் பரவும் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள் !

Nivin pauly latest fat pictures viral on social media

பிரபல இயக்குனரான வினீத் சீனிவாசன் அவர்களின் மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. மெட்ரோ, டிராபிக், ஸ்பானிஷ் மசாலா போன்ற பல படங்களில் அதனைத் தொடர்ந்து நடித்தார். ஓம் ஷாந்தி ஓசானா, பெங்களூர் டேஸ், ஒரு வடக்கன் செல்பி போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார்.

Nivin pauly latest fat pictures viral on social media

பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகரித்தது.

Nivin pauly latest fat pictures viral on social media

இவர் தற்போது தமிழ், மலையாளம் என திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வரும் நிவின் பாலி தற்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் நிவின் பாலி ஸ்டில் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி போயுள்ளனர். மேலும், அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nivin pauly latest fat pictures viral on social media

Share this post