கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பம் ? நித்யா மேனன் & பார்வதி அறிவிப்பால் ஷாக்கான ரசிகர்கள் !
நடிகர் - நடிகைகள் திடீர் திருமணம் செய்து கொள்வது, கர்ப்பம் ஆனதை அறிவிப்பது என திடீர் திடீர் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் பார்வதி நாயர் மற்றும் நித்யா மேனன் வெளியிட்டுள்ள பதிவு செம வைரலாகி சர்ச்சை மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதை கண்டறியும் கருவியும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். அந்த கருவியில் இரண்டு கோடுகள் வந்தால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என அர்த்தம். அதேபோல் அவர்கள் பதிவிட்ட புகைப்படத்திலும் இரண்டு கோடுகள் இருந்தததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர்.
உண்மையில், அது அவர்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் ப்ரோமோஷன் தான். திரைப்படங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அப்படத்தை புரமோட் செய்வது முக்கியமான ஒன்று. அப்படி தற்போது வெளியாகும் படங்களெல்லாம் புரமோஷனுக்காக கோடிக்கணக்கில் செலவழிப்பதும் உண்டு. ஒரு சிலரோ சர்ச்சைக்குரிய வகையில் புரமோட் செய்து, தங்களது படத்தைப் பற்றி பரபரப்பாக பேசை வைத்துவிடுவார்கள்.
கடந்த ஆண்டு கூட நடிகை வனிதா, பவர் ஸ்டார் உடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். இதைப்பார்த்த பலரும் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் போல என நினைத்து வாழ்த்துக்களையெல்லம் தெரிவித்தனர். ஆனால் இறுதியில் அது தாங்கள் நடிக்கும் படத்தின் போஸ்டர் என கூறி அதிர்ச்சி கொடுத்தார் வனிதா.
தற்போது மலையாள திரையுலகிலும் இதுபோன்ற ஒரு நூதன முறையிலான புரமோஷன் தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் பார்வதி, நித்யா மேனன் இருவருமே திருமணமாகாதவர்கள். அப்படி இருக்கையில் எப்படி கர்ப்பமாகி இருக்க முடியும் என சிலர் கேள்வி எழுப்ப, இறுதியில் அது அவர்கள் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்காக இப்படி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதை அறிந்து கடுப்பான நெட்டிசன்கள், புரமோஷனுக்காக இப்படியா செய்வது என திட்டி வருகின்றனர்.