'என் விரல்கள் தொடைகள் வழியாக..' கடும் விமர்சனத்திற்குள்ளான போட்டோவுடன் பிரபல நடிகையின் சர்ச்சை பதிவு..!
’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன். நயாத், கிரேட் இந்தியன் கிச்சன், தெக்கன் தள்ளுகேஸ், மாலிக், ஈடா போன்ற பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ என்று கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார்.
இந்த வரிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் அதில் உள்ள புகைப்படமும் சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், உண்மையில் அவர்தான் பதிவு செய்தாரா? அல்லது யாராவது அவரது இன்ஸ்டா பக்கத்தை ஹேக் செய்து பதிவு செய்திருக்கிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.