Viral Video : "கோழிக்கு ஒரு நியாயம்.. மாட்டுக்கு ஒரு நியாயமா? வெட்டக்கூடாதுனா எதையும் வெட்ட கூடாது" - நடிகை நிகிலா விமல் பேட்டி

Nikhila vimal open statement about eating cow meat video getting viral

பாரத நாட்டியம், குச்சிப்புடி, கேரளா நடனம் போன்ற கலைகளை முறையாக கற்றவர் நடிகை நிகிலா விமல். ஷாலோம் சேனலில் செயின்ட் அல்போன்சா டாக்குமெண்டரி மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், மலையாள மொழியில் ஒரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, வசந்த மணி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் . இதையடுத்து, கிடாரி, தம்பி, சிபி நடிப்பில் வெளியாகவுள்ள ரங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Nikhila vimal open statement about eating cow meat video getting viral

இந்நிலையில், நடிகை நிகிலா விமல், மாட்டிறைச்சி விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “மாட்டை வெட்டக்கூடாதா? இல்லையா? என்ற விதிமுறையெல்லாம் நம்மூரில் இல்லை. மாட்டை வெட்டக்கூடாது என்ற பேச்சு தான் இப்போது அதிகளவில் எழத் தொடங்கி உள்ளது.

அப்படி பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்குகளையும் தான் பாதுகாக்க வேண்டும். வெட்டக்கூடாது என்றால் எதையும் வெட்டக்கூடாது. கோழி, மீனையெல்லாம் சாப்பிடும் போது மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாதா? கோழிக்கு ஒரு நியாயம்.. மாட்டுக்கு ஒரு நியாயமா? மாற வேண்டும் என்றால் அனைத்தையும் தவிர்த்துவிட்டு முழு சைவமாக மாற வேண்டும்.

மாட்டுக்கு மட்டும் சலுகை வழங்கக்கூடாது. சாப்பிடலாம் என்றால் அனைத்தையும் சாப்பிடலாம், இல்லையென்றால் எதையும் சாப்பிடக்கூடாது” என நடிகை நிகிலா விமல் காட்டமாக தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this post