விஜய் டிவியில் விரைவில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் அடுத்த சீசன்.. பங்கேற்றும் பிரபல ஜோடி.. குஷியில் ரசிகர்கள் !

தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், தொடருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சூப்பர் சிங்கர், கலக்கபோவது யாரு, குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் செம பேமஸ்.
ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல் தொடர்கள் சின்னத்திரையில் டிஆர்பியில் இடம்பெறுவது வழக்கம். அந்த வரிசையில், விஜய் டிவியில் மாபெரும் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒன்று.
கடந்த 3 சீசன்களாக வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி, TRPயில் உச்சம் தொட்ட, Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வருகின்றனர். கடந்த 3வது சீசனில் நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக இருந்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் 4ம் சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதற்கான ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் துவங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த 4வது சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார்? என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பலரும் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பலரும் ரசிகர்கள் பலரும் பிரபல ஜோடியான சித்து-ஸ்ரேயா ஜோடி போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்னும் சில தீவிர ரசிகர்கள் அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் அவர்கள் வந்தால் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்றெல்லாம் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு கமெண்ட்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார்கள் சிந்து - ஷ்ரேயா தம்பதி.
இவர்களை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா- அர்ஜுன், சமீபத்தில் திருமணமான அஜய் கிருஷ்ணா- ஜெஸ்ஸி என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.