விஜய் தேவரகொண்டாவின் குசும்பு..! சமந்தாவின் morphed புகைப்படம்.!

New Movie Pooja Vijay Devar Konda Samantha Morphed Pictures Viral

அர்ஜுன் ரெட்டி மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிப்பில் லைகர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் குத்து சண்டை வீரர் மைக் டைசன், நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார்.

இந்த படத்தை அடுத்து அடுத்த திரைப்படமான “JGM” படத்தில் விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்நாத் இணைய உள்ளனர். JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். மேலும் இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அடுத்த படத்தை அறிவித்துள்ளார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ஷிவ நிர்வானா இயக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். ஹேஷம் அப்துல் வாஹப் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜையில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்விகள் எழுப்பிய நிலையில், இப்போது விஜய் தேவாரகொண்டா பூஜையில் சமந்தா இருப்பது போல மார்ஃப் செய்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ”பிரியமானவர்களோடு பூஜை புகைப்படம். ஊடகத்தினர் இந்த புகைப்படத்தைப் பகிரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த குறும்பான விஷயத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

New Movie Pooja Vijay Devar Konda Samantha Morphed Pictures Viral

Share this post