'கைதி' ஹிந்தி ரீமேக் கதை'ல இப்படியொரு மாற்றமா.. என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. கலாய்க்க தொடங்கிய நெட்டிசன்கள்
2019ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், தீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
முற்றிலும் மாற்றுப்பட்ட கதைகளத்துடன் அக்ஷன் திரைப்படமாக வெளியான கைதி மெகா ஹிட்டான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக பிரபலம் அடைந்தார். கைதி விஜய் படமான பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
பின்னர், விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ், தற்போது கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். கைதி படத்தின் reference வைத்து மினி லோகேஷ் யூனிவெர்ஸ் ரெடி செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். மேலும், விக்ரம் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை லோகேஷ் பெற்று வருகிறார்.
இந்நிலையில் கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படம் இன்னும் தொடங்கபடாமல் இருந்து வருகிறது. ஆனால், கைதி ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் பலதும் இணையத்தில் பரவி வருகிறது.
Bholaa என்னும் தலைப்பில் உருவாகவுள்ள அப்படத்தில் நரேனின் கதாபாத்திரத்தில் நடிகை தபூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் அஜய் தேவகன் தான் அப்படத்தை இயக்கவுள்ளதாக தகல் வந்துள்ளது. இதனை தமிழ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.