மைனாவின் கணவரின் வீடியோவால் செம டென்ஷன் ஆன நெட்டிசன்கள்.. கமெண்டில் வறுத்தெடுக்கும் மக்கள் !
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல சீரியல்கள் இவருக்கு பிரபலம் பெற்று தந்தது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் அதில் இவர் பெயர் மைனா, அதே பெயரே இவரது அடைமொழியாக மாறிவிட்டது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3, வம்சம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இவர் இரண்டாவதாக திருமணம் செய்தவர் நடிகர் யோகேஷ். இவரும் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். அதன் மூலம் செம பேமஸ். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர்.
சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் மாறிப் போயினர். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மைனா ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோவால் நெட்டிசன்கள் இவரை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில், மிகவும் ஆபத்தான ரம்மி விளையாட்டை விளையாட சொல்லி ப்ரோமோட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் கமெண்டில் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டனர். யோகி நடித்த அந்த விளம்பரம் 1 வருடம் முன்னர் எடுக்கப்பட்டது.