நெஜமாவே ஜாலியோ ஜிம்கானா தான்.. 'Beast Special' சன் டிவி நிகழ்ச்சிக்காக நம்ம தளபதிய பேட்டி எடுத்தது இவர் தான்..

Nelson dilipkumar to interview vijay for sun tv special show for beast

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, தற்போது பீஸ்ட் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் சூழலில் இப்படம் மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Nelson dilipkumar to interview vijay for sun tv special show for beast

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Nelson dilipkumar to interview vijay for sun tv special show for beast

இப்படத்தின் ஆடியோ லான்ச் இல்லை என்று தகவல் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். ஆனால், இப்படத்திற்காக கடந்த 9 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் நடிகர் விஜய். சன் டிவி ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது என்று வெளியான தகவல் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10ம் தேதி ஒளிபரப்பு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி விஜய் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியை, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தான் தொகுத்து வழங்க போகிறாராம். குறும்பு பேச்சுக்கு பெயர் போன நெல்சன் விஜயை பேட்டி எடுத்தால் செம fun ஆக தான் இருக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Nelson dilipkumar to interview vijay for sun tv special show for beast

Share this post