தலைவர்169 படத்துக்கு பதிலா தனுஷ் படத்தை இயக்குறாரா நெல்சன் ? இதோ உண்மை விவரம் !

Nelson dilipkumar to concentrate on thalaivar169 script

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்ததை தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் நெல்சன் திலீப்குமார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

Nelson dilipkumar to concentrate on thalaivar169 script

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே அதிகம் பெற்றது. இதனால் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது.

Nelson dilipkumar to concentrate on thalaivar169 script

இதனிடையே நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். ஆனால் அப்படம் ஷூட்டிங் பணி தொடங்கும் முன்பே பீஸ்ட் பட தோல்வி காரணமாக நெல்சன் அப்படத்தை இயக்கமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனர் இயக்குவார் என தகவல் பரவியது.

Nelson dilipkumar to concentrate on thalaivar169 script

மேலும் நெல்சன் தனுஷுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து, நெல்சன் நெருங்கிய வட்டாரத்தில் நெல்சன் தலைவர் 169 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் எனவும், பீஸ்ட் பட ஸ்கிரிப்ட்ல் நெல்சன் கவனம் செலுத்தியிருக்கலாம் என பலர் ரஜினி 169 பட ஸ்கிரிப்ட்ல் மீண்டும் ஒருமுறை வேலை செய்து வருகிறாராம் நெல்சன்.

தலைவர் 169 படத்திற்கு பிறகு தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this post