4 கார் இருக்கு அத விட்டுட்டு.. ஏன் சைக்கிள்ல ஓட்டு போட போனீங்க ?.. விஜய் பதில பாருங்க

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என 2 பாடல்கள் வெளியாகி வைரல் ஆனது. மேலும், இப்படத்தில் ட்ரைலர் வெளியாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்காக ஸ்பெஷல் பேட்டி ஒன்றை விஜய் தந்துள்ளார். இதனை நெல்சன் தொகுத்து வழங்கியுள்ளார்.
பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை, அதனால் விஜய் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தில் இருந்த நிலையில், அதற்கு பதிலாக சன் டிவியில் விஜய் பேட்டி கொடுத்து இருப்பது ஒரு ஆறுதலாக உள்ளது.
10 வருடங்களுக்கு பிறகு விஜய் பேட்டி கொடுத்துள்ள நிலையில், இதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது. நெல்சன் காமெடியாக பல கேள்விகளை விஜய்யிடம் கேட்டிருக்கிறார்.
அதில், தேர்தலில் வாக்களிக்க 4 கார்களை விட்டுவிட்டு ஏன் சைக்கிள் எடுத்துட்டு போனீங்க என கேட்க, விஜய் “silent-ஆ இருக்கியா” என சொல்வது போல ப்ரோமோவில் வந்துள்ளது . இந்த நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 10ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.