'உள்ளாடை சைஸ்'.. 'எந்த position'.. என ஆபாசமாக கேள்வி கேட்ட நபருக்கு நீலிமாவின் செருப்படி பதில் !

ஒரு பெண்ணின் கதை என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கிய நீலிமா ராணி, தேவர் மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதனைத் தொடர்ந்து, ப்ரியசகி, இதய திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நீலிமா ராணி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அதிலும், அத்திப்பூக்கள், தென்றல், வாணி ராணி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நீலிமாவின் அழகிற்கும் திறமைக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதற்காக பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.
சின்னத்திரை தொடர்கள், திரைப்படங்கள் மட்டுமல்லாது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்க்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார் நீலிமா. நெட்டிசன் ஒருவர், உங்க உள்ளாடை சைஸ் என்ன என கேட்டுள்ளார். இதற்கு, “நான் ஏன் உனக்கு சொல்ல வேண்டும். நீ விற்க போறியா?” எனவும், மற்றொருவர் செக்ஸ் பற்றி கொச்சையான கேள்வியை கேட்டுள்ளார். இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் அளிப்பது என பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறு ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்களை நீலிமாவின் ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.