ஹனிமூன் முடிஞ்சதும் நயன் - விக்கி நேரா எங்க போயிருக்காங்க பாருங்க.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்..
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.
இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா பிரஸ் மீட் வந்து செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது எதிர்காலத்திற்கு அனைவரது ஆசிர்வாதமும் தேவை என கூறி நன்றி கூறினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
புதுமணத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 12 நண்பகல் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர். கேரளாவின் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற நட்சத்திர ஜோடி வந்தனர்.
கொச்சியில் உள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம் செய்துள்ளனர். கோவிலில் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் செம வைரல்.
நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து ஷூட்டிங் இருப்பதால் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லும் பிளானை தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டது. திருமணம் முடிந்ததும் முதலில் ஜவான் படத்தில் நடிப்பதாக இருந்தது.
தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய விக்கி - நயன் ஜோடி, வீட்டுக்கு கூட வராமல் நேராக மும்பை சென்றுள்ளது. அங்கு அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்வதற்காக நயன்தாரா அங்கு சென்றுள்ளார். வேலை விஷயத்தில் கரெக்டாக இருக்கும் நயன்தாராவை பார்த்து வாயடைத்துப் போன அவரது ரசிகர்கள், இதனால் தான் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர்.