நயன் - விக்கி திருமணம் : முகூர்த்த நேரம், மண்டபம், யாருக்கெல்லாம் அழைப்பு குறித்து வெளியான தகவல் !

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம்.

அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக விக்னேஷ் சிவன், இவரது 2வது திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இதன் பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறி இருந்தார்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

இந்நிலையில், அடிக்கடி கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்கள் பக்கம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நயன்தாரா பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

அவ்வப்போது, விக்னேஷ் சிவன், தாங்கள் இருவரும் வெளியே செல்வது, சாப்பிடுவது, கோவிலில் வழிபடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில், சிறந்த லிரிஸிஸ்ட்கான விருதை பெற்றார் விக்னேஷ் சிவன்.

அப்போது மேடையில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர் பிரியங்கா. கூடிய விரைவில், அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

தற்போது, இதுதான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண அழைப்பிதழ் என ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதன் படி, சென்னை மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும், எந்த முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்கள் எனவும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த 3 முக்கிய பிரபலங்கள் விக்னேஷ் சிவனின் பேவரைட் ஹீரோவும், நண்பருமான விஜய் சேதுபதி, நயன்தாராவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சமந்தா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சன், இவர்களை மட்டுமே அழைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

முதலில், திருப்பதியில் திருமணம் வைக்க முடிவு செய்து தற்போது மஹாபலிபுரம் மாற்றியதன் காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் 9ம் தேதி திருமணம் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அனுமதி கோரி இருந்தனர்.

இந்த திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பில் இருந்தும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்திவிட்டார்களாம். இதன் காரணமாக, அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது திருமணம் நடைபெறும் இடத்தை மாற்றி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

லேட்டஸ்ட் தகவலின் படி, நயன் - விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விவிஐபிக்கள் 30 பேர் எனவும், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோர் அந்த விவிஐபி.,க்கள் லிஸ்டில் உள்ளனராம்.

மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Nayanthara vignesh shivan marriage venue timings and guests list information out

மகாபலிபுரத்தரில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Share this post