'கெட்டிமேளம் கொட்டிட இனிதே நடந்த நயன் - விக்கி திருமணம்'.. வெளியான புகைப்படங்கள் !

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம்.

அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

மகாபலிபுரத்தரில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் இவர்களது திருமண நிகழ்ச்சி துவங்கியது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் விதவிதமாக போட்டோக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

தற்போது புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

Nayanthara vignesh shivan marriage photos getting viral on social media

Share this post