'எங்க மருமக நயன்' - கல்யாணத்துக்கு ஷாப்பிங் பட்டியல்.. அது மட்டுமா ? லிஸ்ட் எவ்ளோ பெருசா இருக்கு !

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்தார். 2015ம் ஆண்டு முதல் காதலில் இருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது. இதனால், திருச்சி லால்குடிகாரர்கள் நயன்தாராவை எங்க ஊர் மருமக என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் வருகின்றனர்.

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

திருச்சி மாவட்டம், லால்குடி வடக்குதெருவை சேர்ந்த சிவக்கொழுந்து - மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். சினிமாவுக்காக தனது இயற்பெயரான விக்னேஸ்வரன் என்ற பெயரை விக்னேஷ் சிவன் என மாற்றிக் கொண்டிருக்கிறார்.

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

சிவக்கொழுந்து தற்போது இல்லை. தாய் மீனாகுமாரி விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் லால்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

லால்குடிகாரர்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக பார்க்கிறார்கள். இதனை தொடர்ந்து, மக்கள் வேற லெவல் பிளான் போட்டு வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு ஒருவேளை நயன்தாரா லால்குடிக்கு வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியல் போட்டு பகிர்ந்திருக்கின்றனர். இதோ அந்த பட்டியல்..

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

துணி எடுக்க வேண்டும் என்றால் சங்கம் சில்க்ஸ், நகை எடுக்க வேண்டும் என்றால் மங்களம் ஜீவல்லர்ஸ். மளிகை சாமான் வாங்குவதற்கு அருணா சூப்பர் மார்க்கெட் அல்லது லெட்சுமி மளிகைக் கடை அல்லது அண்ணாமலை மளிகைக்கடை. காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்கு உழவர் சந்தைக்கு போக வேண்டுமாம். சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால் கேண்டிரெஸ்டாரன்ட் போக வேண்டுமாம். இயற்கையாக ஆற்றில் குளியல் போடா கூழையாறுக்கு போக வேண்டுமாம்.

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

இதுக்கடுத்து தான் சிறப்பே, அதாவது, நயன்தாரா கர்ப்பவதியான பின்னர் பரிசோதனைக்கு செல்லும் வரை யோசித்து விட்டனர். பிரசவத்துக்கு பாப்புலர் ஹெல்த்கேர் மருத்துவமனை, குழந்தைகள் வளர்ந்தவுடன் வெள்ளனூர் நவபாரத் வித்யாலயாவில் படிக்க வைக்கலாமாம்.

Nayanthara vignesh shivan marriage information makes vignesh shivan native people happy

இத்தனையும் திட்டமிட்டு பட்டியல் போட்டு நயன்தாரா வரவுக்காக தயாராக இருக்கிறார்கள் லால்குடி வாசிகள். ஆனால் இதற்கு நயன்தாரா தயாராக இருக்கிறாரா? என்பது தான் யோசனை !

Share this post