'O 2' திரைப்படத்தில் 'அம்மா' ரோலில் நயன் ! யூடியூப் புகழ் ரித்விக் தான் மகனாமே !

Nayanthara to act as mother in o2 film

தென்னிந்திய திரையுலகில் டாப் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, கோலமாவு கோகிலா, டோரா போன்ற படங்கள் மூலம் தனது தனித்துவத்தை நிரூபித்தார்.

Nayanthara to act as mother in o2 film

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்த பிறகு, தற்போது, நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘O 2’ . விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

Nayanthara to act as mother in o2 film

சமீபத்தில் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கும் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Nayanthara to act as mother in o2 film

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை கூறும் படம் “ஓ-2” என சொல்லப்படுகிறது.

Nayanthara to act as mother in o2 film

தமிழ்நாடு, கேரளா பார்டர் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இப்படத்தில் 8 வயது மகனுக்கு அம்மா பார்வதியாக நயன்தாரா நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதில் யூடியூப் புகழ் ரித்விக் நயன்தாரா மகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Share this post