'என்றும் நன்றியோடு இருப்பேன்' விக்னேஷ் சிவனுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய நயன்தாரா.!
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக புகழும் வரவேற்பும் கொண்ட இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனெக்ட். விக்னேஷ் சிவன் - நயன்தாரா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹாரர் ஜானரில் உருவான இத்திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா சில பேட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்நிலையில், ‘கனெக்ட்’ படத்திற்காக நடிகை நயன்தாரா நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நடிகை நயன்தாரா கூறியுள்ளதாவது… ‘ இந்த ஆண்டு எனக்கு ஒரு நிறைவான ஆண்டாகும்’. கனெக்ட் படத்தை பார்த்து ஆதரவளித்த திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.
இந்த படத்தின் இயக்குனரான அஸ்வின் சரவணன் என்னை நம்பியதற்கு நன்றி. உலகம் தரம் வாய்ந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது அன்பு நிறைந்த தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி. இந்த திரைப்படத்தையும், குழுவையும், நம்பி படத்தை சிறந்த முறையில் தயாரித்து, விநியோகம் செய்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்.
உங்கள் அன்பு, ஆதரவு, கருத்து, மற்றும் விமர்சனங்கள், அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு இதை ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும், உங்களின் நிபந்தனையற்ற அன்புக்கும் நன்றி கூறிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.