விக்கி பிறந்த நாளுக்கு பிரமாண்டமாக சர்ப்ரைஸ் செய்த நயன்தாரா.. வைரலாகும் வீடியோ & போட்டோஸ் !

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறித்து netflix டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கொண்டிடாடி வருவதை விக்னேஷ் சிவன் புகைப்படங்களை பதிவிடுவதன் வாயிலாக பகிர்ந்து வந்தார்.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

இந்நிலையில், விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா சர்ப்ரைஸாக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். இதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலாகி வருகிறது.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக துபாய் சென்றிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா முன்பு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர். இதற்காக நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வேற லெவலில் ஆச்சரியம் ஒன்றை செய்துள்ளார்.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

விக்னேஷ் சிவனின் தாய் மற்றும் உறவினர்களை விக்னேஷ் சிவனுக்கே தெரியாமல் துபாய்க்கு வரவழைத்து அவருக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்து இருக்கிறார் நயன்தாரா.

nayanthara surprised vignesh shivan on his birthday celebrating in front of burj khalifa towers

திருமணம் நடந்து தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு ஆசை மனைவியின் முதல் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி. விக்னேஷ் சிவனின் 37வது பிறந்த நாளுக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post