பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. ஆக்ஸிஜன் இன்றி தவிக்கும் பயணிகள்.. வைரலாகும் O2 டிரைலர் வீடியோ!

Nayanthara starring o2 trailer video getting viral on social media

தென்னிந்திய திரையுலகில் டாப் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, கோலமாவு கோகிலா, டோரா போன்ற படங்கள் மூலம் தனது தனித்துவத்தை நிரூபித்தார்.

Nayanthara starring o2 trailer video getting viral on social media

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்த பிறகு, தற்போது, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘O2’ .

ஜி எஸ் விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Nayanthara starring o2 trailer video getting viral on social media

ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கும் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara starring o2 trailer video getting viral on social media

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள்.

நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை கூறும் படம் “ஓ-2” என சொல்லப்படுகிறது.

Nayanthara starring o2 trailer video getting viral on social media

தமிழ்நாடு, கேரளா பார்டர் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இப்படத்தில் 8 வயது மகனுக்கு அம்மா பார்வதியாக நயன்தாரா நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இதில் யூடியூப் புகழ் ரித்விக் நயன்தாரா மகனாக நடித்துள்ளார். இதன் டீசர் வீடியோ மற்றும் சுவாசமே என்னும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Nayanthara starring o2 trailer video getting viral on social media

ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் எப்படி தவிக்கின்றனர் என்கிற பாணியில் கதை உருவாகி இருப்பதை டிரைலர் உண்ர்த்துகிறது. இதில் அம்மாவும் மகனுமாக காட்டப்பட்டுள்ள சீன்கள், பள்ளத்தில் சிக்கும் மனிதர்களின் மனோநிலை என அனைத்தும் எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது.

Nayanthara starring o2 trailer video getting viral on social media

ட்ரைலர் வீடியோவே நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த ட்ரைலர் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this post