'எல்லாருகிட்டயும் பேசினாங்க.. என்னைய வேணும்னே விட்டுட்டாங்க..' நமீதா பற்றி நயன் Open Talk !

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம்.

அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக விக்னேஷ் சிவன், இவரது 2வது திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இதன் பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

திருமணத்திற்கு பின், நயன்தாரா - விக்னேஷ் சிவன் கேரளா சென்றனர். அங்கு அவர்கள் கோவில்களுக்கு சென்ற போட்டோஸ் வைரல் ஆனது.

Nayanthara speaks about experience acting with namitha video getting viral

இந்நிலையில், சினிமாவில் வளர்ந்து வரும் காலத்தில் நயன்தாராவிற்கும் மற்ற நடிகைகளுக்கும் இடையே இருந்த பிரெச்சனை குறித்து பழைய பேட்டி ஒன்றில் நயன்தாரா பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், திரிஷாவ Friendன்னு சொல்ல கூட முடியாது, நமீதா என்னைய avoid பண்ணினாங்க போன்ற பல உண்மைகளை பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது..

Share this post