பேட்டியில் மாளவிகாவை வெச்சி செய்த Nayanthara.. வைரலாகும் வீடியோ!

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட்.
படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொள்ள அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறார் நயன்தாரா என்பதை பரபரப்பான காட்சிகளுடன் காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இந்தக் காட்சியை பார்ப்பதற்காக நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திரையரங்கிற்கு வந்தார்.
அப்படி சமீபத்தில் சில பேட்டிகளிலும் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது, நடிகை மாளவிகா மோகன் ஒரு பேட்டியில் இவரை கலாய்க்கும் வகையில் பேசியது குறித்து நடிகை நயன்தாரா பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனிடம் ”தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன். ஒரு மருத்துவமனை காட்சியில், அவர் கிட்டத்தட்ட இறந்து கொண்டிருக்கிறார். ஆனால், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்.
அதை பார்த்த போது எப்படி ஒருவர் இறக்கும் நிலையில் லிப்ஸ்டிக்கோடு இருப்பார் என்று தான் தோன்றியது. அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும், நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றாலும், அது கொஞ்சம் யதார்த்தமாக இருக்க வேண்டும் இது கொஞ்சம் லாஜிக்கை மீறி இருந்தது என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள நயன்தாரா ‘ஹாஸ்பிடல் சீன என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
#Nayanthara's Reply to Malavika Mohanan..👌 #Connect pic.twitter.com/YnaOB2yPBJ
— World Wide Box office (@Boxofficepage) December 22, 2022
malavika-வை வெச்சி செய்த Nayanthara || #malavikamohanan interview || #c... https://t.co/9wccdWOviG @MalavikaM_ @NayantharaPSU @NayantharaU pic.twitter.com/4G3jmXKQqR
— Open Mic Tamil (@openmic_Tamil) December 21, 2022